1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 8 அக்டோபர் 2020 (14:17 IST)

"Parkinson" நோயால் உயிரிழிந்த ஆரியின் அம்மா இத்தனை கொடுமைகளை அனுபவித்தாரா?

நடிகர் ஆரி பிக்பாஸ் வீட்டில் தான் அனுபவத்த சில கசப்பான அனுபவங்களை குறித்து சக போட்டியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். சினிமா ஆசையுடன் சென்னைக்கு வந்த ஆரி சேரன் கொடுத்த வாய்ப்பின் மூலம் "ஆடும் கூத்து" என்ற படத்தில் நடித்தார். இந்த படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதினை வென்றது. ஆனால் படம் திரையரங்கில் வெளியாகவில்லை.

10 ஆயிரம் கொடுத்து தன்னை சென்னைக்கு வழியனுப்பி வைத்த தந்தை சிறுது காலத்தில் இறந்துவிட அவரது தாய் சென்னை கிளம்பி வந்துள்ளார். அப்போது அம்மா திடீரென அப்பா எங்கே? என கேட்டு அவரை தேடி சென்றவுள்ளார். ஒன்றும் புரியாத ஆரிக்கு அன்று தான் அம்மாவிற்கு "Parkinson" ( நடுக்குவாதம்) என்ற நோய் இருப்பதை அறிந்துகொண்டார்.

இந்த நோய் வந்தால், அவர்கள் சுய நினைவோடு இருக்கமாட்டார்கள், கை , கால்கள் சரியாக செயல்படாது. நடுக்கம் அதிகமாக இருக்கும். இப்படியான நிலையில் ஆரியின் அம்மா நாகேஷ் திரையரங்கம் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது இறந்துவிட்டதாக கூறி தான் கடந்து வந்த பாதைகளை பிக்பாஸில் பகிர்ந்த்துக்கொண்டார். இப்படியான கஷ்டத்திலும் ஆரி முன்னேறியுள்ளதை கண்டு மக்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.