புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 27 அக்டோபர் 2020 (17:54 IST)

சப்ஜெக்டுக்கு உயிர் வந்துடுச்சு - இந்த வாரம் முழுக்க இவங்க தான் Promo'ல வருவாங்க!

இன்றைய பிக்பாஸின் மூன்றாவது ப்ரோமோவில் தங்க சுரங்கம் என்ற புதிய டாஸ்க் ஒன்றை போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளனர்.அதில் வீட்டில் உள்ள அனைவரும் சுரங்கத்தில் சென்று சிதறிக்கிடக்கும் தங்க துகள்களை சேகரிக்கவேண்டும்.

இதில் 4 பேர் கொண்ட குழு அமைத்துக்கொண்டு யார் அதிக தங்கத்தை சேகரித்து பதுக்கி வைக்கிறார்களோ அவர் தான் டாஸ்க்கின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள். இந்த போட்டியில் பாலா சனம் ஷெட்டி மற்றும் சம்யுக்தாவிற்கு இடையில் சண்டை வந்துவிட்டது.

பிக்பாஸ் ஆரம்பித்ததில் இருந்தே சம்யுக்தா என்ற கேரக்டர் மற்ற போட்டியாளர்களை போன்று பெரிதாக எந்த விஷயத்திலும் Involve ஆகவில்லை. முதன்முறையாக இன்று தான் அவர் சனம் ஷெட்டியுடன் சண்டை போட்டு ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளார். எனேவ இந்த சண்டை அப்படியே வாக்குவாதமாக மாறி இந்த வாரம் முழுக்க சம்யுக்தா பேசப்படுவார் என எதிர்பார்க்கலாம்.