புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 7 அக்டோபர் 2020 (12:50 IST)

மண்டையில முடியும் இல்ல மூளையும் இல்ல - வீண் வம்பிழுக்கும் சுரேஷ் சக்ரவர்த்தி!

அனிதாவை தொடர்ந்து வம்பிழுக்கும் சுரேஷ் சக்ரவர்த்தி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே சுரேஷ் சக்ரவர்த்தி சக போட்டியாளர்களிடம் வம்பிழுத்து சண்டை போட்டு வருகிறார். இதனால் அவர் தொடர்ந்து மக்களால் வெறுக்கப்பட்டு வருகிறார். ஆரம்பத்தில் ஷிவானியை வம்பிழுத்த சுரேஷ் தற்ப்போது அனிதாவிடம் வாக்குவாதம் செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் அனிதாவை யாரிடமும் பேசாதே என கூறி பிரச்சனையை கிளப்புகிறார். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு...என்னை செருப்பால அடிக்குறவங்க கிட்ட நான் பேசமாட்டேன் என சுரேஷ் கூற அதற்கு சித்தன் ரமேஷ் நல்ல மாட்டுக்கு ஒரு சூடுன்னா அப்போ எருமை மாட்டுக்கு என்ன சூடு..? என கேட்டு செம பல்ப் கொடுத்துட்டார்.

உடனே அனிதா நக்கலாக சிரித்தார். இப்போதைக்கு மக்களால் அதிகம் வெறுக்கப்படும் நபராக சுரேஷ் இருகிறார். மக்கள் இவருக்கு ஓட்டே போடாமல் வெளியேற்றுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.