வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 31 டிசம்பர் 2020 (14:27 IST)

ப்ரீஸ் டாஸ்கில் பார்க்க வரவங்க எல்லாரும் ஆரியையே புகழ்ந்து தள்ளுறாங்கப்பா!

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக ப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களை பார்க்க அவர்களது குடும்ப உறவினர்கள் வந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கின்றனர். அந்தவகையில் ஷிவானியின் அம்மா , பாலாஜியின் நண்பர் உள்ளிட்டவர்களை தொடர்ந்து இன்று கேபியின் அம்மா வந்துள்ளார். 
 
அவர் வீட்டிற்குள் நுழைந்ததும் கேபியை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினார் . அதையடுத்து ஆரியிடம் சென்று உங்களை நெடுஞ்சாலை படத்தின் போதே சந்தித்திருக்கிறேன் எனக்கூறி அவரிடம் பேசினார். பின்னர்  கேபியின் தவறுகளை சுட்டிக்காட்டினார். 
 
இருந்தாலும் எல்லோருக்கும் ஷிவானியின் அம்மாவை தான் மிகவும் பிடித்துவிட்டது. ஷிவானியை கண்டித்த விதமும் , ஆரியை மதித்த விதமும் ஆடியன்ஸிற்கு மிகவும் பிடித்துவிட்டது. இன்னும் ஆரி குடும்பத்தினரை பார்க்க  தான் எல்லோரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.