திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (15:19 IST)

கசிந்தது பிக்பாஸ் 4 போட்டியாளர்களின் இறுதி பட்டியல் - யார் யாருன்னு பாருங்க!

பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியின் 3 சீசன்கள் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இது குறித்த முதல் புரோமோவை நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதை அடுத்து பிக்பாஸ் நான்காவது சீசன் உறுதி செய்யப்பட்டது.

கடந்த ஜூன் மாதமே ஆரம்பிக்கவேண்டிய பிக்பாஸ் 4 சீசன் கொரோனா உரடங்கினாள் தள்ளி சென்று வருகிற அக்டோபர் 4ம் தேதி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. கடந்த ஒரு மாத காலமாகவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களின் பெயர்கள் தொடர்ந்து அடிபட்டு வருகிறது.

அந்தவகையில் ஷிவானி நாராயாணன், சனம் ஷெட்டி, கேப்ரில்லா, நடிகை ரேகா, ரம்யா பாண்டியன், தொகுப்பாளினி அர்ச்சனா அறந்தாங்கி நிஷா, ஆண் போட்டியாளர்கள் ஆஜித், வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ், அனுமோகன் என மொத்தம் 13 பேர் பங்கேற்க உள்ளதாக சமீபத்திய லிஸ்ட் கூறுகிறது. பார்ப்போம் பொருத்திருந்து...