வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 7 செப்டம்பர் 2019 (15:18 IST)

அய்யோ..! ஆண்டவரே சுத்தி வளைச்சு பேசாம நேரடியா விஷயத்துக்கு வாங்கோ !

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வீடியோவில், இந்த வாரம் வீட்டிற்குள் நடந்த அளப்பறைகளை பற்றி பேசுகிறார் கமல் . 


 
இந்த வாரம் இரண்டு பெரிய சண்டைகளை தீர்த்து வைப்பதற்காகவும் நியாயத்தை சொல்வதற்காகவும் வந்துள்ள கமல் லொஸ்லியா மற்றும் கவினின் பஞ்சாயத்தை நிச்சயம் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள இந்த ப்ரோமோவில் "ஆர்வம் குறைந்துவிட்டது...சலிப்பா இருக்கு ..தியாகத்துக்கு ரெடி...என்றெல்லாம் சொன்னவர்கள் ரொம்ப தீவிரமா விளையாட ஆம்பிச்சுட்டாங்க"... "வெற்றி முக்கியம் தான். எப்படியாவது வெற்றி பெறுவேன் என்பது ஒரு முறை, இப்படி தான் வெல்வேன் என லட்சியத்தோடு வெல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இரண்டாவது தான் சிறந்தது எனபதை எடுத்து சொல்லும் நேரம் இது" என கூறியுள்ளார் கமல்.

இருந்தாலும் இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் சிலர் "அயோ..! ஆண்டவரே கொஞ்சம் தெளிவா சொன்னீங்கனா விளக்கும் ....50 தடவைக்கு மேல இந்த ப்ரோமோவை திருப்பி திருப்பி பார்த்துட்டேன் ஒன்னும் புரியலை" என கூறி கிண்டலடித்து வருகின்றனர்