செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 26 ஜூன் 2019 (18:26 IST)

"சித்தப்பு வேலைய ஆரம்பிச்சுட்டாரு " - லீக்கானது மூன்றாவது ப்ரோமோ!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோ வீடியோவில் பருத்தி வீரன் சரவணன் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.


 
இன்றைய நாளுக்கான முன்றாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளியாகியுள்ளது. 
 
முதல் ப்ரோமோவில் மீரா மிதுனுக்கு அபிராமிக்கு இடையே சண்டை வலுத்தது. இந்த சண்டையில் மூக்கை நுழைத்து மொக்கை வாங்கினார் வனிதா. அதனை தொடர்ந்து அடுத்ததாக வெளிவந்த இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் ரேஷ்மா தனது வாழ்வில் நிகழ்ந்த கசப்பான அனுபவத்தை போட்டியாளர்களின் கூறி கண்கலங்கி அழுத்துவிட்டார். 
 
அதனை தொடர்ந்து தற்போது கடைசியாக வெளியவந்துள்ள மூன்றாவது ப்ரோமோவில் பருத்திவீரன் சரவணன் தலைவி வனிதாவை பங்கமாக கலாய்க்கின்றார். அதே நேரத்தில் மீரா மிதுனையும் நீங்கள் ஒரே நாளில் இப்படி நடந்துகொண்டது தவறு என கூறி கண்டிக்கிறார்.