1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (16:32 IST)

என் தம்பி எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துக்கிறேன்: பாரதிராஜா

’கற்றது தமிழ்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் ’தங்கமீன்கள்’ ’தரமணி’ ’பேரன்பு’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம் என்பது தெரிந்ததே. மேலும் அவர் ’சவரக்கத்தி’ ’சைக்கோ’ போன்ற படங்களில் நடித்தும் உள்ளார். இவருடைய தங்கமீன்கள் படம் 3 தேசிய விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று இயக்குனர் ராம் அவர்கள் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கோலிவுட் திரையுலகில் உள்ள பல பிரபலங்களும் ரசிகர்களும் காலை முதல் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
அந்த வகையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் ராம் அவர்களுக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்தில் கூறியிருப்பதாவது:
 
ஒப்பனை இல்லாத கலைஞன்,யதார்த்தமான வாழ்வியல், இலக்கியத்தரமான வரலாறு போற்றும் படைப்புகள்.. என் தம்பி ராம்.. எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துக்கிறேன்..