திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 20 மே 2022 (19:21 IST)

முடிவுக்கு வந்தது பரத்தின் 50வது படம்: விரைவில் ரிலீஸ்!

bharath 50a
முடிவுக்கு வந்தது பரத்தின் 50வது படம்: விரைவில் ரிலீஸ்!
பரத் நடித்த ஐம்பதாவது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததை அடுத்து இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
பரத், வாணிபோஜன் நடிப்பில் ஆர் பி பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லவ். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் இந்த படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
படப்பிடிப்பு முடிந்ததை கொண்டாடும் புகைப்படத்தை வாணிபோஜன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது 
இந்நிலையில் இந்த படத்தை வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இன்னும் ஒரே மாதத்தில் முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது