1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 8 அக்டோபர் 2022 (15:10 IST)

பரத் வாணிபோஜன் நடிக்கும் மிரள் படத்தின் டீசர் வெளியீடு!

பரத் தற்போது மிரள் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடிக்கிறார்.

நடிகர் பரத் நடித்த ஐம்பதாவது திரைப்படத்திற்கு லவ் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 51வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு மிரள் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பாக சிவகார்த்திகேயன் இந்த இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை வெளியிட நல்ல கவனம் பெற்றது. பரத் ஜோடியாக வாணிபோஜன் நடித்துள்ள இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார் மீரா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.  இந்த படத்தை சக்திவேல் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் எஸ்.என்.பிரசாத் என்பவர் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது மிரள் படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.