திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 30 ஜூலை 2021 (20:51 IST)

நடிகர் விஜய்யுடன் மோதும் ’பாகுபலி’ ஹீரோ !

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

சன்பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படம் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி ரிலீஸாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பிரபாஸ் , பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகிவரும் ராதே ஷயாம் படமும் அதே தினத்தன்று ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே நடிகர் விஜய்கு தெலுங்கு, மலையாளம் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் என்பதால் இப்படம் அம்மொழிகளில் வெளியாகிறது.

பாகுபலி படத்திற்குப் பின் பிரபாஸின் மார்க்கெட் உயர்ந்துள்ளதால் அவரது படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸாகிறது.  எனவே விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு பிரபாசின் ராதே ஷ்யாம் போட்டியாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.