1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 24 பிப்ரவரி 2018 (13:35 IST)

பெரியம்மா ஆனதை தனது ட்விட்டரில் தெரிவித்த காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவலை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார்.
நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால். விமல் ஹீரோவாக நடித்த இஷ்டம் என்ற படத்தில் இவர் நாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு படவாய்ப்புகள் இல்லாததால் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கரண் வலேச்சா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இந்நிலையில்  நேற்று முன்தினம் நிஷா அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவலை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் கர்ப்பமாக இருந்து வந்த நிஷா அகர்வாலுக்கு வளைகாப்பு நடந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு நிஷா அகர்வாலுக்கு ஆண் குழந்தை  பிறந்துள்ளது. குழந்தைக்கு இஷான் வலேச்சா என்று பெயர் வைத்துள்ளனர். மேலும் பிறந்த குழந்தையுடன் தான் எடுத்துக்கொண்ட போட்டோவையும் வெளியிட்டிருக்கிறார். இதன்மூலம் காஜல் அகர்வால் பெரியம்மாவாகி உள்ளார்.
 
இதனை பார்த்த ரசிகர்கள் வழ்த்துகளை தெரிவித்ததோடு, உங்களுக்கு எப்போ திருமணம் எனக் கேட்டு வருகின்றனர்.