திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (16:19 IST)

பிக்பாஸ் வீட்டில் கெட்டவனாக மாறியதற்கான காரணத்தை விளக்கும் சிநேகன் - ப்ரொமோ

பிக்பாஸ் வீட்டில் அனைவருக்கும் பட்டம் கொடுக்கப்பட்டது. சுஜாக்கு "நாடகக்காரி" என்ர பட்டதை வழங்கினார் ஜூலி. அந்த  பட்டதை பெற்ற சுஜா "இந்த பட்டத்தை ஒரு பெரிய நாடகக்காரியிடம் இருந்து பெறுவதில் சந்தோசம்" என கோபமாக கூறினார்.

 
அதே நேரம் தந்திரக்காரன் பட்டதை சக்தியிடமிருந்து பெற்ற சிநேகன், நான் எத்தனை தடைகளை தாண்டி வந்துள்ளேன்.  இதையும் தாண்டி ஜெயித்து காட்டுவேன் என கூறினார். பின்னர் பிக்பாஸ் வீட்டின் தலைவர் பதவிக்கு போட்டியில்  தோல்வியடைந்தார். இதனை தொடர்ந்து மிகவும் சோகமாகவும், சிந்தித்தபடியும் காணப்பட்டார் சிநேகன்.
 
இந்நிலையில் தற்போது வந்துள்ள ப்ரொமோவில் ஓவியா பிரச்சனையில் மட்டும் தான் முரண்பாடு ஏற்பட்டது. 100 விஷயம் சொன்னால் 2 விஷயத்தை எதார்த்தமாக ஷேர் பண்றோம். பிக்பாஸ் வீட்டில் நான் கெட்டவனாக மாறியதற்கு ஒரேயொரு  காரணம் உள்ளதாக தெரிவிக்கிறார்.
 
பிக்பாஸ் வீட்டில் தந்திரமாகவும், புறம்பேசுவதிலும், சாணக்கிதனமாகவும், மக்களின் முன்னால் பேச தைரியம்  இல்லாதவராகவும் உள்ளார் சிநேகன் என கூறப்பட்டு வருகிறார்.