திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 21 மார்ச் 2020 (16:05 IST)

நீலாம்பரியாக இருங்கள் – வைரலாகும் கொரோனா மீம் !

கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நீலாம்பரியாக இருங்கள் என்ற மீம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு வருகின்றனர். ஆனால் இதை 20 வருடங்களுக்கு முன்னதாகவே ஒருவர் செய்துள்ளார். அவர் வேறு யாருமல்ல நீலாம்பரிதான்.

படையப்பா படத்தின் வில்லியான நீலாம்பரி ரஜினிகாந்தை பழிவாங்க 18 வருடமாக தனது அறைக்குள்ள்யே முடங்கிக் கிடப்பதைக் குறிப்பிட்டு நீலாம்பரி நாம் அனைவரும் நீலாம்பரி போல தனிமையில் இருக்கவேண்டும் என்று மீம்ஸ் ஒன்று வைரல் ஆகி வருகிறது. அந்த மீமில் ‘இவர் நீலாம்பரி. இவர் நிலைமையைப் புரிந்துகொண்டு வீட்டுக்குள்ளேயே தங்கி இருந்தார். நீலாம்பரி தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டார். மக்களிடம் இருந்து பல அடிகள் தொலைவிலேயே இருந்தார். நீங்களும் நீலாம்பரி போல இருங்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.