ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vm
Last Updated : ஞாயிறு, 24 பிப்ரவரி 2019 (10:45 IST)

ராமநாதபுரம் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் பாலா!

வர்மா படத்தில் இருந்து விலகிய இயக்குனர் பாலா,தனது அடுத்த பட வேலையில் தீவிரமாக இறங்கிவிட்டார்.
அரசியல் படத்தை எடுக்க முடிவு செய்துள்ள பாலா, அதில் தனக்கு நெருக்கமான ஆர்யாவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக களப்பணியில் இறங்கி உள்ளார் பாலா.
 
அரசியல் படம் என்பதால் மக்கள் பிரச்சனைகளை தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? அதற்காக பாலா ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு  வந்தார். 

அங்குநடைபெற்றுக் கொண்டிருந்த மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு, பணிகள் நடைபெறும் விதத்தை மேற்பார்வையிட்டார்.
 
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலா ‘ நான் இயக்கும் புதுப்படத்தில் இது போன்றக் காட்சிகள் இடம்பெறுகின்றன. அதனால் இந்தக் கூட்டங்கள் எப்படி நடைபெறுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வதற்காக இங்கு வந்தேன்' என்றார்.