ஆயுத பூஜை அன்று வெளியாகவுள்ள 8 படங்கள்

Sasikala| Last Modified சனி, 2 செப்டம்பர் 2017 (18:01 IST)
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம், வைபவி சாந்தில்யா, மயில்சாமி, ராதாரவி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி படம் சர்வர் சுந்தரம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

 
சர்வர் சுந்தரம் வரும் 7ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஆயுத பூஜை அன்று திரைக்கு வரயிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் வேலைக்காரன் படமும், ஆயுத பூஜை அன்று வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. 
 
விஜய் சேதுபதியின் கருப்பன், நயன்தாராவின் அறம், கவுதம் கார்த்திக்கின் ஹர ஹர மகாதேவகி, ஜிவி பிரகாஷின் செம்ம, ஜெய் நடித்துள்ள பலூன் ஆகிய பல படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது.
 
மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் மகேஸ்பாபுவின் ஸ்பைடர் படம் இந்த மாதம் 27ம் தேதி  வெளியாகவுள்ளது. இப்படி ஒரே நாளில், கிட்டத்தட்ட 8 படங்களுக்கு மேல் வெளியாவதால் திரையரங்கம் கிடைப்பதில் சிக்கல்  ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :