வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (21:26 IST)

''ஜெய்பீம் ''படத்திற்கு விருதுகள் குவியும்..சிம்பு பட இயக்குநர்

நடிகர் சூர்யாவின் படத்திற்கு விருதுகள் குவியும் என சிம்பு பட இயக்குநர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடித்து தயாரித்துள்ள படம் ஜெய்பீம். இப்படத்தை த.செ. ஞானவேல் இயக்கியுள்ளார். இப்படம் நல்லவரவேற்பை பெற்றுள்ள நிலையில், நடிகர்களும், பிரபல இயக்குநர்களும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில்,ஜெய்பீம் திரைப்படத்தை பிரபல இயக்குநர் சுசீந்தரன் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது அறிக்கையில், இந்த திரைப்படத்தில் கதையின் நாயகி செங்கேனி -லிஜோமோல் பேசிய வசனங்களைவிட பேசாத முகபாவனைகல் அற்புதம், நிறைய விருதுகள் இப்படத்திற்காக உங்களுக்குக் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இவரது இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு ஈஸ்வரன் என்ற படம் ரிலீஸாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.