செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 2 ஜூன் 2021 (15:27 IST)

ஷாருக் கானிடம் நெருங்க முடியாத தூரத்தில் அட்லி!

இயக்குனர் அட்லி ஷாருக் கானை வைத்து படம் இயக்குவதற்கான வேலைகளில் மும்முரமாக இருந்து வருகிறார்.

இயக்குனர் அட்லி ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கி அதன் மூலம் கோலிவுட்டின் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இதையடுத்து அவர் ஷாருக் கான் படத்தை இயக்கும் வாய்ப்புக்காக சமீபகாலமாக பாலிவுட்டில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் அவர் இயக்கும் படத்துக்கான வேலைகள் மும்முரமாக இப்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திரைக்கதையை எல்லாம் முடித்து இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள அட்லி திரைக்கதை சம்மந்தமாகவோ அல்லது பிற விஷயங்கள் சம்மந்தமாகவோ ஷாருக் கானிடம் பேச முயன்றால் அவரின் உதவியாளர்தான் போனை எப்போதும் எடுக்கிறாராம். என்ன விவரங்கள் என்று கேட்டுக்கொண்டு பின்னர் அவரே ஷாருக் கானிடம் தெரிவிப்பாராம். அட்லிக்கும் ஷாருக் கானுக்கும் இடையே இடைவெளி இருக்கும் விதமாக அந்த உதவியாளர் பார்த்துக் கொள்கிறாராம்.