அசுரன் பட நடிகைக்கு கொரோனா உறுதி!
நடிகை அம்மு அபிராமிக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ராட்சசன் மற்றும் அசுரன் ஆகிய படங்களின் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் அம்மு அபிராமி. இப்போது அவர் அருண் விஜய் நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரே தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.