செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 1 மே 2023 (15:19 IST)

பாலிவுட் பின்னணியில் கதைக்களம்… இயக்குனராக அறிமுகமாகும் ஆர்யன் கான்!

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இப்போது ஆர்யன் கான் தற்போது ஒரு வெப் சீரிஸை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதுபற்றிய பதிவில் நடிகர் ஷாருக் கான் ”இப்போது தைரியமாக இருக்க வேண்டும். கனவு நனவாகியுள்ளது” எனக் கூறியுள்ளார்.

ஸ்டார்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் தொடரை நெட்பிளிக்ஸ் மற்றும் ஷாருக் கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. பாலிவுட் பின்னணியில் நடப்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த வெப் தொடர் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தொடரில் ஷாருக் கான் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.