வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 31 ஜனவரி 2019 (11:57 IST)

ஆர்யா உள்ளே… – முடியாத இந்தியன் 2 நடிகர் தேர்வு !

இந்தியன் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது மீண்டும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்தியன் படத்தின் முதல் பாகம் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. அதையடுத்து 22 ஆண்டுகள் கழித்து இப்போது அதன் இரண்டாம் பாகம் தொடங்கியுள்ளது. கமலின் கடைசிப் படம் என்ற அறிவிப்போடு உருவாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஜனவரி 18 அன்று இந்தியன் 2 படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக உருவானது. ஆனால் ஆரம்பித்து சில நாட்களிலேயேகமலின் இந்தியன் தாத்தா மேக் அப்பில் ஷங்கர் திருப்தி அடையாத காரணத்தால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேக் அப் விஷயங்களை சரிசெய்யும் பணிகள் ஒருபுறம் நடைபெற மற்றொரு புறம் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் கதாபாத்திரங்களின் தேர்வும் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இப்ப்டத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த சிம்பு கால்ஷீட் பிரச்சனைகளால் விலக சித்தார் ஒப்பந்தமாகியுள்ளார். அதையடுத்து மற்றுமொரு கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்யாவிடம் படக்குழு பேசி வருகிறதாம். அவர் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் கமலோடு, காஜல் அகர்வால், நெடுமுடி வேணு மற்றும் சித்தார்த் ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் பணிபுரிய முதல்முறையாக ஷங்கர் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் வசனத்தை எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் ஆகியோர் எழுதுகின்றனர்.