ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 4 ஜூலை 2017 (18:42 IST)

ஆர்யா-ஜீவா கூட்டணியில் தயாராகும் புதிய படம்

‘கடம்பன்’ படத்தையடுத்து அமீர் இயக்கும் சந்தனதேவன், சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.  இதில் மற்றொரு நாயகனாக ஜெயம்ரவி நடிக்கிறார். சந்தனதேவன் படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யாவும் இதில் மற்றொரு  நாயகனாக நடிக்கிறார்.

 
அடுத்து ஜீவா சங்கர் இயக்கும் புதிய படத்திலும் 2 நாயகர்களில் ஒருவராக ஆர்யா நடிக்கிறார். இதில் மற்றொரு ஹீரோ ஜீவா.  இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. 
 
ஏற்கனவே ஆர்யா நடித்த பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் சிறப்பு வேடத்தில் ஜீவா நடித்தார். தற்போது சங்கிலி புங்கிலி கதவ  தொற படத்தின் மூலம் தன் வெற்றியை உறுதி செய்துள்ளார் ஜீவா. இப்போது நடிக்கும் புதிய படத்தில் 2 பேருமே ஹீரோக்களாக வருகிறார்கள். படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.