செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 பிப்ரவரி 2024 (17:22 IST)

சூர்யா இந்த படத்தை மிஸ் பண்ணிட்டோமென்னு வருத்தப்படுவார்: ‘வணங்கான்’ டீசர்’

சூர்யா நடிக்க இருந்து அதன் பிறகு அருண்விஜய் நடிப்பில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ என்ற படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகிய நிலையில் இந்த டீசர் மிரட்டலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
 தேசிய விருது பெற்ற பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரகனி, மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘வணங்கான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதை அடுத்து சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. 
 
இந்த டீசரில் அருண் விஜய் நடிப்பில் மிரட்டி இருப்பதை பார்க்கும்போது சூர்யா இந்த படத்தை மிஸ் செய்து விட்டாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. பாலாவின் இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தில் விக்ரம் நடித்த கேரக்டரின் சாயலில் அருண் விஜய் கேரக்டர் இந்த படத்தில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
ஜிவி பிரகாஷ் பின்னணி இசையில் பட்டையை கிளப்பி உள்ளார் என்பதும் இந்த படம் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும் என்பதும் டீசரில் இருந்து தெரியவருந்துள்ளது.
 
Edited by Mahendran