வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 3 மார்ச் 2019 (17:35 IST)

மீண்டும் போலீஸ் வேடத்தில் அருண்விஜய்!

நடிகர் அருண்விஜய் போலீஸ் வேடத்தில் நடித்த 'குற்றம் 23' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் ஒரு போலீஸ் படத்தில் நடிக்க அருண்விஜய் ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குனர் கண்ணன் உதவியாளர் கோபிநாத் நாராயணமூர்த்தி என்பவரின் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படம் சமீபத்தில் தமிழகத்தையே உலுக்கிய ஒரு நிஜ நிகழ்ச்சி குறித்த கதை என்றும் இந்த படத்தில் அருண்விஜய்யுடன் சில பிரபலங்களும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஒருவர் நாயகியாக நடிக்கவிருப்பதாகவும், விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட இந்த படத்தில் டூயட் பாடல், ரொமான்ஸ் காட்சிகளுக்கு இடமில்லை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அருண்விஜய்யின் 'தடம்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பேராதரவை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது