அருள்நிதியின் அடுத்த பட அறிவிப்பை வெளியிடும் தனுஷ்: டைட்டில் இதுதான்!
கடந்த 2010ஆம் ஆண்டு வம்சம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் அருள்நிதி. அதன்பின்னர் மௌனகுரு, தகராறு, டிமான்டி காலனி, ஆறாது சினம் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்
இந்த நிலையில் தற்போது அவர் சீனுராமசாமி இயக்கி வரும் ஒரு திரைப்படத்திலும், களத்தில் சந்திப்போம் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவர் டைரி என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பதும் இந்த திரைப்படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் அவர்கள் தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன்னர் பைவ் ஸ்டார் கதிரேசன் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகிவரும் டைரி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜனவரி 3ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என்றும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
அருள்நிதியின் அடுத்த படமான டைரி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இன்னாசி பாண்டியன் என்பவர் இயக்கி வருகிறார்