செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 19 மே 2022 (17:34 IST)

அடுத்தடுத்து மூன்று ரிலீஸ்… அருள்நிதியின் “D ப்ளாக்” ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அருள் நிதி நடிப்பில் உருவாகி வரும் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் தேதியை அறிவித்து வருகின்றன.

தமிழ் சினிமாவில் டிமாண்டி காலணி, ஆறாவது சினம் உள்ளிட்ட வித்தியாசமான கதைகளங்களை கொண்ட படங்களில் நடித்து வருபவர் அருள்நிதி. இவர் நடிப்பில் தற்போது டைரி, டி ப்ளாக் மற்றும் தேஜாவு ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

முன்னதாக டைரி திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. அது போலவே தேஜாவு திரைப்படமும் ஜூன் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது டி பிளாக் திரைப்படம் ஜூலை 1 ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து மூன்று மாதங்களில் மூன்று அருள்நிதி படங்கள் ரிலீஸாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.