திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 2 ஜனவரி 2021 (13:42 IST)

’’என்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா???’’ உதயநிதிக்கு சவால் விடுத்த நடிகை குஷ்பூ

சட்டசபைத் தேர்தலில் என்னை எதிர்த்துப் போட்டியிடத் தயாரா? என பாஜக கட்சியின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியின் சட்டசபைத் தேர்தல் பொறுப்பாளர் குஷ்பு  திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியிடம் சவால் விடுத்துள்ளார்.

இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்ட சபைத் தேர்த நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதற்காக ஆளும்கட்சி மீண்டும் ஆட்சியில் அமரவும், எதிர்க்கட்சி திமுக ஆட்சியைப் பிடிக்கவும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டுவருகிறது. இதற்கிடையே கமலின் மையம் கட்சியும்,சீமானின் கட்சியும் தீவிரப் பிரசாரம் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே சீமான் தங்களின் எதிர்க்கட்சி திமுக என்று கூறி ஸ்டாலினுக்கு எதிராக அவரது தொகுதியில் போட்டியிடத் தயார் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாஜக கட்சியின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியின் சட்டசபைத் தேர்தல் பொறுப்பாளர் குஷ்பு சட்டமன்ற தேர்தலில் ’’பாஜக தலைமை வாய்ப்பளித்தால் தான் எந்தத் தொகுதியில் போட்டியிடச் சொன்னாலும் தயார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் என்னை எதிர்த்துப் போட்டியிடத் தயாரா??’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

குஷ்பு முதலில் திமுக, மற்றும் காங்கிரஸிலிருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.