1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (19:26 IST)

எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை: இசை ரசிகர்களுக்கு ஏ.ஆர் ரஹ்மான் விடுத்த வேண்டுகோள்

இசை ரசிகர்களுக்கு ஏ.ஆர் ரஹ்மான் விடுத்த வேண்டுகோள்
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் திடீரென இன்று மாலை அவர் கவலைக்கிடமாக இருப்பதாக வெளிவந்த தகவல் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து கோலிவுட் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகில் உள்ள நட்சத்திரங்கள் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோர் தங்களுடைய டுவிட்டரில் எஸ்பி பாலசுப்ரமணியம் விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்த தகவலை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் தனது டுவிட்டரில் இசை ரசிகர்கள் அனைவரும் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் நானும் பிரார்த்தனை செய்துள்ளேன் என்றும், அவரது குரல் அபாரமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் இயக்குனர் பாரதிராஜா, நடிகர் பிரசன்னா உள்பட பலர் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் எஸ்பி பாலசுப்ரமணியம் விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது