வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 30 நவம்பர் 2018 (18:11 IST)

2.0 ரஜினியை விமர்சித்த ஏ.ஆர்.முருகதாஸ் ! - ரசிகர்களின் ரியாக்சனை பாருங்க!

‘சிவாஜி’, ‘எந்திரன்’ போன்ற மெகா ஹிட் வெற்றி படத்திற்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஷங்கர் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் ‘2.0’
இந்த திரைப்படத்தை லைக்கா பிரமாண்டமான அளவில் 600 கோடி பட்ஜட்டில் தயாரித்துள்ளது. இந்தப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் நடிப்பில் நேற்று வெளியான 2.0 படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது.  
 
அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வரும் 2.0 3டி திரையில் 4டி சவுண்ட் தொழில்நுட்பத்துடன் பட்டய கிளப்பியுள்ளது. 
 
இந்நிலையில் தற்போது 2.0 படத்தை குறித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டரில், 2.0 திரைப்படம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது என்று கூறியுள்ளார். ரஜினிகாந்தின் நடிப்பு மாஸாக மற்றும் ஸ்டைலாக இருந்ததாக கூறியுள்ளார். மேலும் அக்ஷய் குமார் மற்றும் ஒட்டுமொத்த குழுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 
 
இது ரஜினி ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.