வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 7 ஜூன் 2020 (08:24 IST)

என் மேல்தான் தவறு.. நட்டியிடம் மன்னிப்பு கேட்ட அனுராக் காஷ்யப்!

பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் மீது வரிசையாக குற்றச்சாட்டுகளை வைத்து பரபரப்பைக் கிளப்பினார் ஒளிப்பதிவாளர் அனுராக் காஷ்யப்.

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுபவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழ் சினிமாவின் நடிகர்களில் ஒருவராகவும் பாலிவுட்டில் பெரிதும் விரும்பப்படும் ஒளிப்பதிவாளராகவும் அறியப்படும் நட்டி என்கிற நட்ராஜும் நெருங்கிய நண்பர்கள். அனுராக்கின் ஆரம்ப கால படங்களில் நட்டி சம்பளம் பெற்றுக்கொள்ளாமல் வேலை பார்த்துள்ளார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் நட்டி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அனுராக் காஷ்யப் சுயநலவாதி என்றும் தன்னை மறந்துவிட்டார் என்றும் கூறிப் புகார் வைத்தார். இதனால் ரசிகர்களுக்கு இடையே இரு குழுக்களாக பிரிந்து சண்டை போட்டுக்கொள்ளும் அளவுக்கு இந்த விஷயம் பெரிதானது. இதையடுத்து அனுராக் காஷ்யப் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் ‘நட்டியின் குற்றச்சாட்டுகளைப் படித்தேன். அவர் என் நண்பர் மட்டுமல்ல. என் ஆசிரியரும் கூட. கேமராவை எவ்வாறு நகர்த்துவது என்று எனக்குக் கற்றுக்கொடுத்தார்.அவர்தான் எனக்கு தமிழ் சினிமாக்களை அறிமுகப்படுத்தி வைத்தார். தமிழ் சினிமா இயக்குனர் பாலாவை அறிமுகம் செய்து வைத்தார். கடினமான காலங்களில் ஒன்றாக இருந்தோம். ஆகவே அவர் ஏதாவது கோபமாக பேசுகிறார் என்றால் இரு நண்பர்களுக்கு இடையிலான உரிமையான, என்மேல் உள்ள எதிர்பார்ப்பு காரணமாகவே அது வெளிப்பட்டு இருக்கும். அவரது காயம் உண்மையானது. அவருக்கு நான் தேவைப்படும்போது நான் அங்கு இல்லை. எனக்கு இது தெரியவில்லை. ஐ ஆம் சாரி நட்டி’ எனக் கூறியுள்ளார்.

அனுராக்கின் இந்த பதிவுக்கு ’ நன்றி அனுராக் . கடந்த சில நாட்களாக ஊடகங்கள் என்னை மோசமானவனாக சித்திரித்துவிட்டன’ எனக் கூறியுள்ளார்.