வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (15:18 IST)

கூட்டத்தில் மயங்கிய அனுராதா ஸ்ரீராம் – கடவுளாக வந்து காப்பாற்றியவர்கள் !

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிரிவலம் பார்க்க சென்ற பாடகி அனுராதா ஸ்ரீராம் மயங்கி விழுந்தது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பிரபல தமிழ் பின்னணி பாடகியான அனுராதா ஸ்ரீராம், திருவண்ணாமலையில் நடக்கும் கிரிவலத்துக்கு சென்றார். அப்போது விரதத்தின் காரணமாகவும், வெயில் காரணமாகவும் அவர் மயங்கி விழுந்துள்ளார். அப்போது அங்கே தன்னார்வலர்களாக உதவி செய்து கொண்டிருந்த இளைஞர்கள் அவருக்கு முதலுதவி செய்துள்ளனர்.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் அனுராதா ஸ்ரீராம் ‘ கடவுள்தான் இளைஞர்கள் ரூபத்தில் வந்து என்னை காப்பாற்றினார். ஒருவர் கடவுளிடம் தன்னை ஒப்படைக்கும் போது கடவுள் தக்க நேரத்தில் வந்து காப்பாற்றுவார் என்பதை நான் உணர்ந்துள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.