1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 12 ஜூலை 2020 (17:38 IST)

மேலும் ஒரு பாலிவுட் பிரமுகரின் குடும்பத்தினர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

அமிதாப்பச்சன் குடும்பத்திலுள்ள அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் மற்றும் ஆராதித்யா ஆகிய நால்வருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பிரபல பாலிவுட் குணசித்திர நடிகர் அனுபம்கெர் அவர்களின் குடும்பத்தினர் நால்வருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அனுபம்கெர் அவர்களின் தாயா, சகோதரர், அவரது மனைவி மற்றும் மருமகள் ஆகிய நால்வருக்கும் கொரோனா தொற்று இருப்பதை இருப்பதாகவும் தாயார் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மற்ற மூவரும் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்
 
இருப்பினும் அனுபம்கெர் தனக்கு கொரோனா இல்லை என்றும் தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது