திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 23 டிசம்பர் 2023 (16:40 IST)

PIFF விழாவிற்கு தேர்வான படங்கள் அறிவிப்பு

viduthalai set
22 வது புனே சர்வதேச திரைப்பட  விழாவில் திரையிட வெற்றிமாறனின் விடுதலை படம் தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
 

புனேவின் 22வது சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டு ஜனவரி மாதம் 18 ஆம் தேதி முதல் 2 ஆம் தேதி வரை இந்த விழா நடைபெறவுள்ளளது.

இந்த புனே சர்வதேச திரைப்பட விழாவில் என்னென்ன திரைப்படங்கள் திரையிடவுள்ளது என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.

அதன்படி,  22வது புனே சர்வதேச திரைப்பட விழாவில்  வெற்றிமாறனின் விடுதலை,  சீனு ராமசாமியின் இடிமுழக்கம்,  ஜெயப்பிரகாஷின் காதல் என்பது பொதுவுடமை ஆகிய தமிழ் படங்கள் தேர்வாகியுள்ளன.

மலையாளத்தில் மம்முட்டி நடித்த காதல் தி கோர், ஜோஜு ஜார்ஜ் நடித்த இரட்டா ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.