புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 16 நவம்பர் 2021 (14:20 IST)

அண்ணாத்த வசூல் 225 கோடியா? கிளப்பிவிடும் ஆன்லைன் டிராக்கர்ஸ்!

அண்ணாத்த திரைப்படம் உலகம் முழுவதும் 225 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக புள்ளிவிவர புலிகள் கிளப்பிவிட ஆரம்பித்துள்ளனர்.

அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு சோலோவாக தீபாவளிக்குக் களமிறங்கியது. ஆனால் படத்தின் மோசமான விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்கள் வருகைக் குறைய ஆரம்பித்தது. கொஞ்சம் நஞ்சம் வந்து கொண்டிருந்த ரசிகர்களையும் கடந்த வாரம் பெயத கனமழை சுத்தமாக நிறுத்தியது.

இதனால் மிகப்பெரிய ஓபனிங் இருந்தும் அண்ணாத்த படம் பெரிய வசூலை செய்யவில்லை என்று சொல்லபடுகிறது. ஆனால் படத்தை எப்படியாவது ப்ரமோட் செய்யவேண்டும் என்பதற்காக இணையத்தில் போலியான புள்ளிவிவரங்கள் பரப்ப ஆரம்பித்துள்ளனர் சிலர். இன்றோடு கிட்டத்தட்ட 225 கோடி ரூபாய் உலகம் முழுவதும் செய்துள்ளதாக தகவல்கள் பரப்ப்பட்டு வருகின்றன.