செவ்வாய், 24 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (19:37 IST)

இதுதான் விவேகம் படத்தின் கிளைமாக்ஸ்....... உளறிய அனிருத்

கிளைமாக்ஸ் பாடல் வெறியேற ரெக்கார்டு பண்ணும் போது ஆரம்பித்த அனிருத்தை சிவா தொடை மீது லேசாக தட்டி அப்படியே ஆப் செய்துவிட்டார்.


 

 
சிவா இயகத்தில் அஜித் நடித்துள்ள விவேகம் திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விவேகம் படத்தின் டிரைலர் வெளியிடப்படும் என்ற படக்குழுவினர் அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் டிரைலரை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போது வரை டிரைலர் வெளியீடு தேதி அறிவிக்கப்படவில்லை. 
 
இந்நிலையில் விவேகம் படத்தின் பாடல் வெளியீடு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட அனிருத் கிளைமாக்ஸ் பாடல் குறித்து உளறி விட்டார். உடனே சுதாரித்துக்கொண்ட இயக்குநர் சிவா அனிருத் தொடை மீது தட்டி அவரை ஆப் செய்துவிட்டார்.