செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 12 செப்டம்பர் 2024 (09:37 IST)

சிம்புவுக்கு நன்றி சொன்ன ஆந்திர துணை முதல்வர்.. சிம்புவின் பதில் என்ன தெரியுமா?

ஆந்திராவில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் கோடிக்கணக்கில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் நடிகர் சிலம்பரசன் ஆந்திர மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மூன்று லட்ச ரூபாய் நன்கொடை அளித்த நிலையில் அவருக்கு ஆந்திரா துணை முதல்வரும் தெலுங்கு பிரபல நடிகருமான பவன் கல்யாண் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 3 லட்சம் நன்கொடை அறிவித்த பிரபல தமிழ் நடிகர் திரு சிலம்பரசன்  அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இக்கட்டான காலங்களில் மக்களுக்கு ஆதரவாக இருங்கள், உங்கள் ஆதரவு மாநில அரசின் நிவாரணத் திட்டங்களை வலுப்படுத்தும் என்று கூறியுள்ளார்.

இதற்கு பதில் கூறியுள்ள சிலம்பரசன், ‘நன்றி திரு பவன் கல்யாண் அவர்களே, வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான அனைவரும் விரைவில் நலமாக வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Edited by Siva