1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 7 மார்ச் 2021 (17:46 IST)

சென்னை தியேட்டருக்கு திடீர் விசிட் செய்த ‘அன்பிற்கினியாள்’ டீம்: ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

சென்னை தியேட்டருக்கு திடீர் விசிட் செய்த ‘அன்பிற்கினியாள்’ டீம்:
அருண் பாண்டியன் மற்றும் அவருடைய மகள் கீர்த்தி பாண்டியன் நடித்த ‘அன்பிற்கினியாள்’ என்ற திரைப்படம் நேற்று வெளியானது என்பதும் இந்த திரைப்படத்திற்கு ஊடகங்கள் கொடுத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்தில் சுமார் 400 திரையரங்குகளில் வெளியாகி உள்ள இந்த படம் நல்ல வசூலை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சென்னை கமலா தியேட்டரில் திடீரென ‘அன்பிற்கினியாள்’  டீம் விசிட் செய்துள்ளது
 
அருண்பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் தியேட்டருக்கு வந்தவுடன் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்து போட்டி போட்டுக் கொண்டு அவர்களுடன் செல்பி எடுத்த புகைப்படங்களை அருண்பாண்டியன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது