திங்கள், 7 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 18 ஜூலை 2016 (17:58 IST)

அமிதாப் தயாரிப்பில் அஜித்... புஸ்ஸான வதந்தி

அமிதாப் தயாரிப்பில் அஜித்... புஸ்ஸான வதந்தி

அமிதாப்பச்சன் தயாரித்த உல்லாசம் படத்தில் அஜித் நடித்தது உலகறிந்த விஷயம். அந்தப் படம் சரியாகப் போகவில்லை.


 


தற்போது அஜித்தின் மார்க்கெட் நிலவரம் பல படிகள் உயர்ந்துள்ளது. புல்லை விதைத்தாலும் நெல்லை விளைய வைக்க ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். இதன் காரணமாக, அமிதாப்பச்சனிடம், நீங்க படம் தயாரித்தால் நான் நடிக்க தயார் என்று அஜித் சொன்னதாக ஒரு உலகமகா வதந்தி சில தினங்களாக உலவியது. 
 
இந்த பொய்யை வைத்து, அமிதாப் தயாரிப்பில் அஜித் நடிக்கும் படத்தை அட்லி இயக்குகிறார் என்று சிலர் அலங்காரம் செய்து ஊடகங்களில் ஊர்வலம்விட்டனர். 
 
இந்நிலையில், ரசிகர் ஒருவர் ட்விட்டரில், அஜித் படத்தை தயாரிக்கிறீர்களா என்று அமிதாப்பிடம் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு அமிதாப் சொன்ன ஓரெழுத்து பதில், நோ.
 
அமிதாப் இயக்கத்தில் அஜித் என்று தலைப்பு செய்தி வெளியிட்டவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?