திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (19:49 IST)

அமிதாப்பச்சனுக்கு ரூ.60 லட்சம் செலவில் சிலை அமைத்த அமெரிக்க ரசிகர்!

amitab statue
அமிதாப்பச்சனுக்கு ரூ.60 லட்சம் செலவில் சிலை அமைத்த அமெரிக்க ரசிகர்!
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு அமெரிக்காவை சேர்ந்த ரசிகர் ஒருவர் ரூபாய் 60 லட்சம் செலவு செய்து சிலை வைத்துள்ளார் 
 
குஜராத் மாநிலத்தை சேர்ந்த கோபி சேத் என்பவர் அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி மாகாணத்தில் பல ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்
 
இவர் அமிதாப்பச்சனின் தீவிர ரசிகர் என்பது அமிதாப்பச்சனின் படங்கள் வெளியாகும்போது முதல் நாளே குடும்பத்துடன் பார்த்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள தனது வீட்டின் முன்பு ரூபாய் 60 லட்சம் செலவில் அமிதாப்பச்சனின் சிலையை வைத்துள்ளார். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் பங்கேற்றது போன்ற தோற்றத்தில் உள்ளது . இந்த சிலை குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.