திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 26 நவம்பர் 2023 (15:05 IST)

அமீர்-ஞானவேல் ராஜா பிரச்சனை.. தொடர் மெளனம் காக்கும் சூர்யா-கார்த்தி..!

கடந்த சில நாட்களாக அமீர் மற்றும் ஞானவேல் ராஜா பிரச்சனை ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதில் சம்பந்தப்பட்ட சிலர் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் இந்த படத்தில் முக்கியமாக சம்பந்தப்பட்டிருந்த கார்த்தி மற்றும் அவரது சகோதரர் சூர்யா ஆகிய இருவரும் தொடர்ந்து மௌனமாக உள்ளனர்

 இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சசிகுமார் மற்றும் சமுத்திரகனி ஆதரவளித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் பருத்திவீரன் திரைப்படம் வெளியானதற்கு காரணம் சூர்யா தான் என்றும் அவர் பணம் கொடுத்ததால் தான் அந்த படம் வெளியானது என்றும் கார்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார்.
 
ஆனால் தற்போது இந்த பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் நிலையில் கார்த்தி மற்றும் சூர்யா ஆக இருவரும் தொடர்ந்து மௌனம் காக்கின்றனர். உண்மையில் என்ன நடந்தது என்று கார்த்தி மற்றும் சூர்யா விளக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடப்பட்டு வரும் நிலையில் இருவரும் மெளனம் கலைப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அமீருக்கு ஆதரவு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva