புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 24 ஜூலை 2018 (21:41 IST)

எனக்கு இது முதல்முறை: அமலாபால்!

அமலாபால் தனது கணவர் இயக்குனர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் பாலிவுட்டில் நடிக்க உள்ளார். 
 
ஏற்கனவே, முண்டாசுப்பட்டி ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ராட்ச்சசன் படத்தில் நடித்து வருகிறார். அதோடு, கதாநாயகியை மையப்படுத்தி உருவாகி வரும் அதோ அந்த பறவை போல படத்திலும் நடித்து வருகிறார். 
 
தற்போது இவர் பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நரேஷ் மல்ஹோத்ரா இயக்கத்தில் அர்ஜூன் ராம்பால் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தாமியுள்ளார். இந்த படத்தின் மூலம் அமலாபால் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் எனபதால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்.