1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 6 டிசம்பர் 2019 (14:44 IST)

மொடா குடி அமலா பால் - ஒரே கல்ப்பாக கள்ளு குடிக்கும் புகைப்படத்தால் சர்ச்சை!

“சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  அறிமுகமான நடிகை அமலா பால் பிறகு தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகிறார். 
 
மைனா படத்தில் நடித்து பெரும் புகழை பெற்ற அவர் தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்தார். கடைசியாக "ஆடை" படத்தில் நடித்திருந்தார் .
 
இதையடுத்து அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதையே முழுநேர வேலையாக வைத்துள்ள அமலா பால் தென்னை மர கள்ளை கூஜாவில் ஒரே கலப்பாக குடிக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்ஸ் மொடா குடி போல என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.