1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 31 ஜனவரி 2020 (22:30 IST)

அசுரன் தெலுங்கு ரீமேக்கில் இணைந்த பிரபல தமிழ் நடிகை

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக தனுஷ் மற்றும் மஞ்சுவாரியர் நடிப்புக்கு ஏகப்பட்ட பாராட்டு குவிந்தது. அதேபோல் வெற்றிமாறனுக்கு இந்த படத்தின் வெற்றி வேற லெவலுக்கு கொண்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ‘நாரப்பா’ என்ற டைட்டிலை கொண்ட இந்த படத்தில் தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ் நடிக்க உள்ளார். மஞ்சுவாரியர் டைரக்டர் பிரியாமணி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
இந்த நிலையில் அசுரன் படத்தின் பிளாஷ்பேக்கில் அம்முஅபிராமி ஒரு முக்கிய கேரக்டரில் மிக அற்புதமாக நடித்திருப்பார் இந்த கேரக்டரில் நடிக்க ஒரு சில முன்னணி நடிகைகள் பரிசீலனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அமலாபால் அந்த கேரக்டருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
அமலாபால் இணைந்ததை அறிந்து தெலுங்கு ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அமலாபாலுக்கு தெலுங்கு திரையுலகில் நல்ல மார்க்கெட் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது