நான் ஒன்றும் லெஸ்பியன் இல்லை..! ஆனால், அதில் என்ன தவறு..? சர்ச்சை கிளப்பிய அமலா பால்!

Last Updated: செவ்வாய், 16 ஜூலை 2019 (13:32 IST)
தமிழ் சினிமாவின் தற்போதைய சர்ச்சை நடிகையாக பேசப்பட்டு வருபவர் நடிகை அமலா பால். அவர் நடித்துள்ள ஆடை படம் வருகிற 19ம் தேதி திரைக்கு வருகிறது. 


 
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்,  ட்ரைலர், டீசர் என அத்தனையும் வெளிவந்து படத்தின் ரிலீசிற்கு முன்பாகவே பெரும் சர்ச்சைகளை கிளப்பி  வருகிறது. காரணம் இப்படத்தில் அமலா ஆடையின்றி நிர்வாணமாக நடித்துள்ள சர்ச்சையான காட்சி இடப்பெற்றுள்ளது. இதுவரை எந்த ஒரு முன்னணி நடிகைகளும் எடுக்காத தைரியமான முடிவை அமலா பால் ஆடை படத்தில் எடுத்து அனைவரையும் மிரளவைத்துள்ளார். 
 
எனவே ஆடை படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சமீப நாட்களாக ஆடை படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வரும் அமலா பால் பேட்டி ஒன்றில் ஆடை படத்தை பற்றி சர்ச்சையான கருத்து ஒன்றை கூறியுள்ளார். அதாவது,  நான் நடிகை ஆவேன் என்று நினைக்கவில்லை. என்னையும் மீறி நடந்தது. விரும்பி ஏற்றுக்கொண்டேன். நடிகை ஆனபோது என் அப்பா சொன்னார், "நாய் வேஷம் போட்டால் குரைக்க தயங்ககூடாது" என்று. அதைத்தான் ஆடை படத்தில் செய்தேன்.
 
இப்படத்தின் கதைக்கு நிர்வாணமாக நடிக்கவேண்டிய தேவை இருந்ததால் அப்படி நடிக்கவேண்டியதாயிற்று, படத்தில் எந்த ஒரு காட்சியும் முகம் சுழிக்கிற வகையில் இருக்காது என்பதற்கு என்னால் உத்தரவாதம் தர முடியும். காமினி கேரக்டரின் குணாதிசங்கள் இந்த அமலாபாலின் குணாதிசங்களோடு ஒத்திருக்கும். இப்படத்தில் நானும், ரம்யாவும் லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்திருப்பது கதையில் இல்லாதது.  


 
இந்த காட்சியை கண்டு பலரும் விமர்சித்தனர். தோழிகள் இருவரும் தங்கள் அதீத அன்பை வெளிப்படுத்த என்ன செய்வார்களோ அதைத்தான் செய்துள்ளோம். நான் தான் ரம்யாவிடம் கூட முன்பே சொல்லிக் கொள்ளாமல் லிப் லாக் முத்தம் கொடுத்தேன்.ஒரு தோழி இன்னொரு தோழிக்கு லிப் லாக் முத்தம் கொடுத்தால் என்ன தவறு. படத்தின் நான் லெஸ்பியனாக நடிக்கவில்லை.


 
எனது சினிமா பயணத்தில் "மைனா" என் மனசுக்கு நிறைவான படம் அந்த கேரக்டராக நான் காட்டுக்குள் வாழ்ந்தேன். அதன் பிறகு நடித்த படங்கள் எதுவும் எனக்கு மன நிறைவை தரவில்லை தற்போது ஆடை படத்தில் காமினி கேரக்டரில் நல்ல கம்பேக் கிடைத்துள்ளதை உணருகிறேன் என்று கூறியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :