விக்ரம் பார்த்துட்டு பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் போட்ட பதிவு!
பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் விக்ரம் திரைப்படத்தின் கலைஞர்கள் அனைவரையும் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதுவரை தமிழ் படங்கள் படைத்த பல வசூல் சாதனைகளை இந்த திரைப்படம் முறியடித்துள்ளது. கிட்டத்தட்ட திரையரங்குகள் மூலமாக 450 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என தகவல்கள் வெளியாகின்றன.
இதையடுத்து தற்போது ஓடிடியிலும் படம் வெளியாகியுள்ள பல திரையுலக பிரபலங்கள் படத்தைப் பார்த்து பாராட்டி ட்வீட் செய்து வருகின்றனர். அந்தவகையில் நேரம் மற்றும் பிரேமம் ஆகிய படங்களின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் படத்தை பாராட்டி “ஏஜெண்ட் டீனா, உப்பிலியப்பன் மற்றும் விக்ரம் என அனைவரையும் பிடித்திருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் சேதுபதியின் கதபாத்திரங்களில் எனக்கு சந்தனம் மிகவும் பிடித்தது. ரோலக்ஸ் வேற லெவல். கடைசி காட்சியில் ஏஜெண்ட் விக்ரம்மின் அவதாரம் புத்துணர்வாக அமைந்தது. ஒட்டுமொத்த குழுவுக்கும் அன்பும் மரியாதையும்” எனக் கூறியுள்ளார்.