1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 13 செப்டம்பர் 2023 (08:42 IST)

இளையராஜா குரலில் அல்போன்ஸின் கிஃப்ட் படத்தின் புதிய ப்ரமோஷன் வீடியோ!

நேரம், பிரேமம் மற்றும் கோல்ட்  ஆகிய படங்களுக்கு அடுத்து அல்போன்ஸ் புத்ரன் நடன இயக்குனர் சாண்டியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.  இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி நடந்து வரும் நிலையில் படத்துக்கு கிஃப்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் இளையராஜா இசை மற்றும் வரிகளில் 7 பாடல்கள் இடம்பெறும் என போஸ்டரிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றது.

இந்நிலையில் இப்போது இளையராஜா பாடலுக்கு மெட்டமைக்கும் ஆடியோ ப்ரோமோவை அல்போன்ஸ் புத்ரன் வெளியிட அது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இந்த படத்தின்  இசை வெளியீட்டு உரிமையை சோனி ம்யூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.