1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2024 (15:10 IST)

அல்லு அர்ஜுனின் கைதுக்குப் பின்னால் அரசியல் காரணமா?

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் இந்த படத்தை பார்க்க பெண் ஒருவர் தனது மகனுடன் சென்றிருந்த நிலையில், அல்லு அர்ஜுன் அங்கு வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் சிக்கி அந்த பெண் உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை சம்பந்தப்பட்ட சந்தியா தியேட்டர் மீதும், அல்லு அர்ஜுன் மீதும் பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது நடிகர் அல்லு அர்ஜுனை ஹைதராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அல்லு அர்ஜுன் கைதுக்குப் பின்னால் அரசியல் காரணம் இருப்பதாக ஒரு தகவல்  பரவி வருகிறது. புஷ்பா 2 சக்ஸஸ் மீட்டில் பேசிய அல்லு அர்ஜுன் தெலங்கானா முதல்வர் ரேவாந்த் ரெட்டிக்கு அவர் நன்றி தெரிவிக்காததால்தான் கைது செய்யப்பட்டுள்ளதாக அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கோபத்தில் கருத்திட்டு வருகின்றனர்.