ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 16 ஜூலை 2018 (20:59 IST)

எல்லாமே செட்டப்பு, எதுவுமே உண்மையில்லை: நித்யாவால் வெளியான பொய்முகங்கள்

பிக்பாஸ் வீட்டில் இருந்த நேற்று வெளியே வந்த போட்டியாளர்களில் ஒருவரான நித்யா முன்னணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பிக்பாஸ் வீட்டில் நடப்பது ஒன்று, மக்கள் பார்ப்பது ஒன்றாக உள்ளது என்றும், தான் வெளியேறிய தினத்தில் பாலாஜியுடன் தனது மகள் பேசியது அனைத்தும் செட்டப் என்றும் கூறியுள்ளார். 
 
தான் வெளியேறிய தினத்தில் தனது மகளை செட்டிற்குள் அழைத்து வந்து 'பாலாஜியிடம் எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்று சொல்லி கொடுத்துள்ளார்கள் என்றும் அம்மாவுக்கு கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக போஷிகா, அவர்கள் சொல்லி கொடுத்ததை கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
மேலும் என்னை வெளியேற்றிய அன்று நான் பேசியது அனைத்தும் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகவில்லை என்றும் முக்கிய விஷயங்களை எடிட் செய்துவிட்டார்கள் என்றும் நித்யா கூறியுள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது.
 
மேலும் அந்த வீட்டில் நான் நானாக இருந்தேன் என்றும் அங்கிருப்பவர்கள் அனைவரும் போலி முகத்துடன் இருப்பதாக கூறிய நித்யா, பாலாஜியுடன் சேரும் பேச்சுக்கே இடமில்லை என்றும், அவர் வெளியே வருவதற்கு முன் விவாகரத்து விஷயங்களை முடித்துவிடுவேன் என்றும் நித்யா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
 
இந்த பேட்டியின் மூலம் கமல் உள்பட அனைவரது பொய்முகங்கள் வெளியே வந்துவிட்டதாகவும், ஒரு நிகழ்ச்சியை கூட உண்மையாக நடத்த முடியாத கமல், எப்படி நாட்டை உண்மையாக நடத்துவார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.