1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Updated : வெள்ளி, 5 மே 2017 (16:32 IST)

விரைவில் வெளியாகிறது ‘விவேகம்’ டீஸர்

அஜித் நடித்துவரும் ‘விவேகம்’ படத்தின் டீஸர் விரைவில் வெளியிடப்படும் என இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார்.


 

 
சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் நடித்துவரும் படம் ‘விவேகம்’. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது.
 
அஜித் பிறந்த நாளான மே 1ஆம் தேதி இந்தப் படத்தின் டீஸர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அன்று வெளியாகவில்லை. விக்ரம்பிரபு நடித்திருக்கும் ‘சத்ரியன்’ படத்துடன், ‘விவேகம்’ டீஸரும் ரிலீஸாகும் என்றார்கள். ‘சத்ரியன்’ படம் 18ஆம் தேதி ரிலீஸாவதால், அன்றுதான் டீஸரும் ரிலீஸ் ஆகும் என்றார்கள். இந்நிலையில், வரும் 11ஆம் தேதி டீஸர் ரிலீஸாகும் என ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் சிவா. அன்று, அஜித்துக்குப் பிடித்த பாபாவின் உகந்த நாளான வியாழக்கிழமை.