திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 2 மார்ச் 2020 (12:04 IST)

மகன் ஆத்விக் பிறந்தநாளை கொண்டாடிய அஜித் குடும்பம் - வைரல் வீடியோ இதோ!

தல என அழைக்கப்படும் தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் கோடான கோடி ரசிகர்களின் பேவரைட் நடிகராக இருந்து வருகிறார். கார் ரேஸ், பைக் ரேஸ் , துப்பாக்கி சுடுதல் என தனக்கு விருப்பமான அத்தனை துறைகளிலும் மிகுந்த கவனத்தை செலுத்தி வரும் அஜித் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். 
 
அஜித்திற்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் மகன் ஆத்விக் இன்று தனது 5வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். குடும்பத்துடன் ஆத்விக்கின் பிறந்தநிலை  கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடியுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
அஜித் ரசிகர்கள் பலரும் ஆத்விக்கிற்கு வாழ்த்து கூறி சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தற்போது வலிமை படத்தின் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.